Friday, 7 November 2014

Iran - Persian

  Leila
சமீபத்தில் விசாகன் தேனி என்ற ஒரு முகநூல் நட்பின் பதிவில்தான் இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள் அறிந்தேன்.

ஈரானிய மொழிப் படமானலைலா”. ஈரானிய இயக்குனர் Dariush Mehrjui (Laila) இயக்கி 1997ல் வெளிவந்திருக்கிறது.
மகிழ்ச்சியான கணவன் மனைவியின் அறிமுகத்துடன் துவங்கும் படம், மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்ற உண்மையை அவள் அறியத் துவங்கும் இடத்தில் அவர்களையும் படம் பார்ப்பவர்களையும் ஒரு வெறுமை கலந்த பயத்தைப் பற்றச் செய்கிறார் இயக்குனர். வாரிசுக்காக மகனை மறுமணம் செய்யச் சொல்லும் மாமியார், கையறு நிலைக் கணவன், இவர்கள் இருவரின் உணர்வையும் மதிக்கவேண்டிய கட்டாயத்தில் மனைவி. இதைச் சுற்றியான உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாத்திரம்தான் லைலா. அவளின் கணவனுக்கு, லைலாவின் முழு ஒத்துழைப்புடனும், சம்மதத்துடனும் மறுமணம் நடக்கிறது. புதுமணத் தம்பதிகள் வீடு வருகிறார்கள், சம்பிரதாயங்கள் நடக்கிறது. இதையெல்லாம் தனியறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த லைலா, அதுவரையில் தம்முடைய கணவன் நம்மில் ஒருவனாகத் தொடர்வான் என்று தன் மனதளவில் பற்றியிருந்த நம்பிக்கையின் ஆணி வேர் சற்றே அசைந்து நகர்கிறது. பொங்கிஎழும் ஏமாற்றம் கலந்த சோகம், அழுகையாகப் பீறிட, தன்னுடைய தாயார் வீடு நோக்கி அங்கிருந்து வெளியேறுகிறாள்.
லைலாவின் அன்பின் மிகுதியுடனே, மறுமணம் செய்தவனின் வாழ்க்கை புது மனைவியுடன் பற்றுதலற்று தொடர்வதுதானே இயல்பு? ஒரு பெண் குழந்தை பெற்ற கையோடு புது மனைவி வேறு ஒருவரை கரம் பிடிக்கிறாள். மழலைச் செல்வத்துடன் தனிமையில் வாழ்ந்து வருகின்றான் லைலாவின் கணவன். ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, தன் முன்னாள் கணவனையும், ஒளிமிகுந்த கண்களையும், உலகிற்கே நம்பிக்கை ஏற்படுத்தும் புன்சிரிப்புடனும் இருக்கின்ற தன் கணவனுக்குப் பிறந்த நான்கு வயது பெண் குழந்தையும் காண்கிறாள் லைலா. தனிமையையும் சோகத்தையும் மட்டுமே பற்றிக்கொண்டிருந்த லைலாவின் இதழில் பல அர்த்தங்களைப் புரிய வைக்கின்ற புன்னகை பூக்கிறது. அந்தச் சிறு புன்னகையுடன் படம் நிறைவடைகிறது.
அந்தக் கடைசி வினாடிகள் மொத்தப்படத்தையுமே அழகாக்குகிறது.



Saturday, 9 August 2014

Turkish

  Love Loves Coincidences



சமீபத்தில்தான் இந்தப்படம் பார்த்தேன். இது ஒரு துருக்கியப்படம்.

காதலை எத்தனையோ விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படிக் கூட சொல்ல முடியுமா என்று யோசிக்க வைத்தபடம். ரொம்ப பிரம்மாண்டமில்லாமல் செயற்கைத் தனமில்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சியமைப்புகள், நடிப்பு, இசை என்று எல்லாமே மிகவும் அழகாக கோர்க்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் இதை ஞாபகப்படுத்துவது போல் சில படங்கள் வந்திருந்தாலும், இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

நாயகன், நாயகி இருவருமே பிறந்தது முதல் இறக்கும்வரை இவர்களின் ஒவ்வொரு சந்திப்புமே எதிர்பாராத நிகழ்வாகவே அமைந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி அவர்களுக்குள் ஏற்படும் ஒரு சந்திப்பு அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகிறது.

பொதுவாக ரசிகன் ஒரு படத்தைப் பார்ப்பதற்கும், ஒரு சினிமாக் கதாசிரியன் ஒரு படத்தைப் பார்ப்பதற்கும் சில வித்தியாசம் உண்டு. ஆனால் எந்தத் திரைப்படம் ஒரு சினிமாக் கதாசிரியனையும் ஒரு ரசிகனாக மாற்றி அவனைக் கதைக்குள் ஒன்ற வைக்கிறதோ, அது மிகவும் உன்னதமான படைப்பாகும் அந்த வகையில் இந்தப்படம் ஒரு உன்னதமான படைப்பு.

இந்தப்படத்தின் விமர்சனம், முன்னோட்டம், திரைப்படக்கலைஞர்கள் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு கீழே காணும் link-களை click செய்யவும்.

REVIEW

TRAILER 

META DATA